Tamil Reader

வீடியோ: இந்த ரமலானின் முதல் ஜும்ஆ : மெக்காவில் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்திய பிரார்த்தனையாளர்கள்..!

Makkah

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் நேற்று இந்த வருட ரமலானின் முதல் ஜும்ஆ தொழுகை நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பிரார்த்தனையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.

தொழுகை நடத்திய அனைத்து தொழுகையாளர்களும் அந்நாட்டு அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கவனமாக பின்பற்றினர். நேற்றைய தினம் மெக்காவில் நடைபெற்ற இந்த தொழுகையின் வீடியோவினை தி நேஷனல் செய்தி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க.!