Tamil Reader

கடலில் மிதக்கும் டெல்லியைப் போல் 3 மடங்கு பெரிய பனிப்பாறை – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்..!

a 76

முழுவதும் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டமான அண்டார்டிக்காவைப் பார்த்து தற்போது பல ஆராய்ச்சியாளர்கள் அச்சமடைந்துவருகின்றனர். காரணம் டில்லியைப் போல 3 மடங்கு பெரிதான பிரம்மாண்ட பனிப்பாறை அங்கே கடலில் மிதக்கத் துவங்கியிருப்பதுதான்.

காலநிலை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் வெப்பம் உள்ளிட்ட காரணங்களினால் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகுகின்றன. இப்படித்தான் உடைந்திருக்கிறது 4,320 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பிரம்மாண்ட பனிப்பாறை.

ஏ-76 என பெயரிடப்பட்டுள்ள அந்த பாறை 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாகும். தற்போது கடலில் மிதக்கும் இந்தப் பனிப்பாறை பல ஆராய்ச்சியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிகழ்வுகள் தொடர்ந்தால் கடற்கரையோரம் அமைந்திருக்கும் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!