Tamil Reader

உலகின் மிகப்பெரிய மாம்பழம் இதுதான் – கின்னஸ் நிர்வாகம் அறிவிப்பு – எடை எவ்வளவு தெரியுமா?

Colombian-Farmers-with-the-heaviest-mango_

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலக வரலாற்றில் மாம்பழத்திற்கு ஏகப்பட்ட குறிப்புகள் உள்ளன. தமிழ்க்கடவுள் முருகனைக் காண்டாக்கி பழனிக்கு அனுப்பிவைத்ததில் மாம்பழத்திற்கு பெரும்பங்குண்டு. எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம். கின்னஸ் மாம்பலம் பற்றிச் சொல்ல வந்தேன். பிரேசிலைச் சேர்ந்த தம்பதி ஒன்று உலகின் மிகப்பெரிய மாம்பழத்தை விளைய வைத்திருக்கிறார்கள்.

ஜெர்மன் ஆர்லாண்டோ நோவோ பெரேரா (Germán Orlando Novoa Barrera) மற்றும் ரெய்னா மரியா மாரோகுயின் (Reina Maria Marroquín) என்னும் சிறிய பெயரைக்கொண்ட இந்தத் தம்பதியின் தோட்டத்தில் தான் உலகின் மிகப்பெரிய மாம்பழம் பழுத்துத் தொங்கிருக்கிறது.

Heaviest-mango-on-the-table_tcm25-657551
Image Credit: guinnessworldrecords

கொலம்பியாவின் போரோகா பகுதியில் இருக்கும் இவர்களது தோட்டத்தில் காய்த்துத் தொங்கிய மாம்பழத்தின் எடை 4.25 கிலோகிராம் ஆகும். இவர்களது மகள் தான் இதனை முதலில் பார்த்திருக்கிறார். தினந்தோறும் இந்த மாம்பழத்தை பார்த்துவந்த அவர், இணையதளத்தில் உலகின் மிகப்பெரிய மாம்பலம் குறித்துத் தேடியிருக்கிறார்.

அப்போது இதற்கு முன்னர் பிலிப்பைன்சில் ஒருவர் 3.435 கிலோ எடையுள்ள மாம்பழத்தை விளைவித்திருந்தது தெரியவந்திருக்கிறது. அடடே.. என தங்களது மாம்பழத்தை எடை போட்டுப் பார்க்கையில் 4.25 கிலோ இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்திருக்கிறது குடும்பம். பின்னர் கின்னஸ் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். கின்னஸ் நிர்வாகமும் மாம்பழத்தை ஆய்வு செய்து, உலகின் மிகபெரிய மாம்பழம் இதுதான் என அறிவித்தும் விட்டது.

Heaviest-mango-in-the-farm-with-farmers_
Image Credit: guinnessworldrecords

இதையும் படிங்க.!