Tamil Reader

உலகின் காஸ்ட்லியான சிக்கன் எது தெரியுமா? ஒரு கிலோ ரூ.1.75 லட்சம் மட்டுமே!

இந்தோனேசியாவில் வளர்க்கப்பட்டுவரும் அயாம் செமனி கோழி இனம் உலகின் மிக விலையுயர்ந்த கோழி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா பகுதியே செமனி கோழியின் பூர்வீகமாகும். அயாம் என்றால் சிக்கன் என அர்த்தம். 12 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த வகை கோழிகள் அங்கு காணப்படுகின்றன. செமனி கோழியின் கண், நாக்கு, உள் உறுப்புகள், எலும்புகள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அத்துணையும் கருப்பு நிறத்தில் காணப்படும். இதனால் இந்த கோழிகளை Black Chicken என்றும் அழைக்கிறார்கள்.

Ayam Cemani Chicken Breed – Everything You Need to Know

இந்த கோழிகள் இங்கிருந்து அமெரிக்கா, இத்தாலி, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு ஜோடி செமனி கோழியின் விலை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோழிகளின் தரத்தை பொறுத்து விலையும் வேறுபடுமாம். சராசரியாக ஒரு கிலோ பிளாக் சிக்கன் 1.73 லட்சம் வரை விற்கப்படுகிறது. விலை அதிகம் என்றாலும் பிளாக் சிக்கனை வாழ்நாளில் ஒருமுறையாவது ருசி பார்த்து விட வேண்டும் என்கிற லட்சியத்தில் சுற்றுலா பயணிகள் பலரும் இந்தோனேசியாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!