Tamil Reader

இறந்துபோன பின்னரும் தூக்கிலிடப்பட்ட பெண் : ஈரானில் நிகழ்ந்த குரூரம்..!

capital punishment

மத்திய கிழக்கில் ஈரான் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமான நாடு. ராஜாங்க உறவுகளிலும் சரி, சட்ட திட்டங்களிலும் சரி தனக்கென ஒரு போக்கை ஈரான் கடைபிடித்து வருகிறது. அதில் ஒன்றுதான் மரணதண்டனை. கடந்தாண்டு மட்டும் ஈரானில் 200 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியே நம்மை அதிரவைக்கும் வேளையில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் சாரா இஸ்மாயில் என்ற பெண்ணின் மரணதண்டனை நம்மை நடுநடுங்கச் செய்திருக்கிறது.

தனது குழந்தையையும் தன்னையும் துன்புறுத்தி வந்த கணவரை தற்காப்பு காரணம் கருதி கொலை செய்திருக்கிறார் சாரா. இதனால் சிறைசென்ற அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தனக்கு முன்னால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் தூக்கிலிடப்படுவதை சாராவை பார்க்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகளில் 16 வது ஆளாக சாரா நிற்கையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார். ஆனாலும், அதிகாரிகள் அவரை தூக்குக் கயிற்றில் தொங்கவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் மீள முடியாத அதிர்ச்சி.

உறவினர்கள் முன்னிலையில்..

ஈரானுடைய சட்டத்தைப் பொறுத்தவரையில், கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் முன்னிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும். அதன்படி, சாரா அமர்ந்திருந்த இருக்கையை அவரது மாமியார் உதைக்க, அதன்மூலம் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சாராவின் வழக்கறிஞர் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க.!