Tamil Reader

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் – ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த அதிசயம்..!

Tamil_News_large

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸ். 25 வயதான இவர் கர்ப்பமுற்று இருப்பதை அறிந்ததும் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரது வயிற்றில் குறைந்தபட்சமாக 7 குழந்தைகள் இருக்கலாம் என ஹலிமாவிடம் சொல்லப்பட்டபோது அவர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.

இருப்பினும் மருத்துவமனையும் அரசும் அவருக்கு தெம்பூட்டின. கடந்த மார்ச் 30 ஆம் தேதி பிரசவத்திற்காக மொராக்கோ நாட்டிற்கு ஹலிமா அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். கூடவே அவரது மருத்துவரும் சென்றிருக்கிறார். இவருக்கு கடந்த செவ்வாய்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து சிசேரியன் மூலமாக அவருக்கு 9 குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

இதில் 5 பெண் மற்றும் 4 ஆண் குழந்தைகள் ஆகும். குழந்தைகள் ஒவ்வொன்றும் 500 கிராம் – 1 கிலோ எடை கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்து அவை உயிர்பிழைத்திருக்கும் கின்னஸ் பட்டியலில் ஹலிமா முதலிடம் பிடித்திருக்கிறார்.

முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த நதியா சுலைமான் என்னும் பெண்மணி 8 குழந்தைகளை உயிருடன் பெற்றெடுத்ததே இதுவரையில் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!