Tamil Reader

மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்த கார் – பெண் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி காரணம்!

பிரிட்டனில் உள்ள டெர்பிஷைரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கார் ஒன்று மின்னல் வேகத்தில் பறந்துள்ளது. சாலையில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வேகமாக பறந்த காரை தடுத்து நிறுத்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வேகமாக பறந்த கார் மெர்சிடிஸ் ஜி வாகன் என்றும் அதனை ஓட்டுவது ஒரு பெண் என்பதும் தெரியவந்தது. மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த காரை ஒருவழியாக போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவசரமாக கழிவறையை பயன்படுத்த வேண்டி இருந்ததால் வேகமாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Stopped Mercedes
பெண் ஓட்டிச்சென்ற கார்

காரணத்தை கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார், பெண் ஓட்டுநர் கூறுவது உண்மையா பொய்யா என்பதை முடிவு செய்ய தெரியாமல் திணறிப்போயினர். முக்கிய சந்திப்புகள், பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தியிருக்கலாமே என அதிகாரிகள் கேள்வி எழுப்பியதற்கு பெண் ஓட்டுநரிடம் உரிய பதில் இல்லை. மேலும் அந்த பெண்ணிடம் தற்காலிக ஓட்டுநர் உரிமம் மட்டுமே இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய அபராதத் தொகையை செலுத்திவிட்டு காரை பெற்றுக்கொள்ளுமாறு பெண்ணை அனுப்பி வைத்தார். அவரும் வேறு வழியின்றி லிஃப்ட் கேட்டு வீடு போய் சேர்ந்துள்ளார்.

இதையும் படிங்க.!