Tamil Reader

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சவூதி இளவரசர் – வீடியோ..!

saudi-prince

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக சவூதி பத்திரிகை முகமை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசருக்கு லேப்ராஸ்கோப்பி மூலமாக அப்பெண்டிசிடிஸ் (appendicitis) அறுவை சிகிச்சை நடைபெற்றதாக அரச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் இளவரசருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

சிகிச்சை முடிந்து இளவரசர் வீடு திரும்பும் வீடியோ ஒன்றினை சவூதி பத்திரிகை முகமை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க.!