Tamil Reader

12 வது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை : கச்சிதமாக கேட்ச் பிடித்த நபர் – வைரலாகும் வீடியோ..!

man-saves-girl-falling-from-balcony

வியட்நாமில் 12 வது மாடியில் இருந்து கீழே தவறிவிழுந்த 3 வயதுக் குழந்தையினை கச்சிதமாக கேட்ச் பிடித்த நபருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

12 வது மாடியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த குழந்தை, தடுமாறி கீழே விழுகிறது. கீழே நின்று அதனை கண்காணித்துக்கொண்டிருந்த டெலிவரி செய்யும் நபரான ங்குயேன் ங்கொக் மன் (Nguyen Ngoc Manh) சரியாக குழந்தையை கேட்ச் பிடித்திருக்கிறார்.

குழந்தைக்கு கை, மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மன்னிற்கு சுளுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தவறி விழுந்த குழந்தையை தாங்கிப் பிடித்த நபருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.!