Tamil Reader

அடேங்கப்பா..விண்வெளியில் பீட்சா உண்ட வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள், மிதக்கும் பீட்சாவை உற்சாகமாக சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. வார இறுதிகளில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து பேசியபடி உணவருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு நிமிட வீடியோவில், 6 விண்வெளி வீரர்கள் ஒன்றாக அமர்ந்து பீட்சாவை சாப்பிடுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Thomas Pesquet (@thom_astro)

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையால் காற்றில் மிதக்கும் பீட்சாவின் மீது தக்காளி சாஸை தடவி அதனை கையில் பிடிக்காமலேயே வீரர்கள் சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க.!