Tamil Reader

போலீஸ் வீட்டில் திருடச் சென்று அசதியால் அங்கேயே தூங்கிய திருடன் – குட்மார்னிங் சொன்ன போலீஸ்..!

BED

தாய்லாந்தில் திருடச்சென்ற இடத்தில் AC யைப் போட்டு திருடன் ஒருவன் தூங்கியுள்ளான். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவன் திருடச் சென்ற இடம் போலீஸ்காரரின் வீடாகும்.

ஜியம் ப்ரசெர்ட் (Jiam Prasert) எனும் காவல்துறை அதிகாரி, இன்று காலை தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது தனது மகள் அறையில் ஏசி ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டிருக்கிறது. அவரது மகள் ஊருக்குப் போயிருப்பதால் யார் ஏசியை போட்டிருப்பார்கள்? என்ற சந்தேகத்துடன் அறையைத் திறந்திருக்கிறார்.

உள்ளே போர்வை பொத்திக்கொண்டு சொகுசாக திருடன் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். எழுந்திரி ராஜா.. யாரு நீ? எனக் கேட்டிருக்கிறார் காவல்துறை அதிகாரி. தன்னுடைய பெயர் அதிட் கின் குந்துட் (Athit Kin Khunthud ) நேற்று இரவு 2 மணிக்கு திருடுவதற்காக உள்ளே வந்தேன்.. கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன் எனக் கொட்டாவிவிட்டபடி சொல்ல, போலீஸ், சக அதிகாரிகளை அழைக்க, ஒரு வழியாக திருடன் பல் தேய்ப்பதற்குள் கம்பி எண்ணச் சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க.!