Tamil Reader

மீண்டும் அடைபட்ட சூயஸ் கால்வாய்.. கப்பல் போக்குவரத்து நிறுத்தம்.. சூயஸ் கால்வாயின் பின்னணி என்ன?

எவர்கிரீன் கப்பலைத் தொடர்ந்து 43,000 டன் எடை கண்ட கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோரல் கிறிஸ்டல் கப்பலை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூயஸ் கால்வாய் அடைபட்டுள்ளதால் மீண்டும் உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் ஒரே ஆண்டில் 2வது முறையாக அடைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

சூயஸ் கால்வாயை சோதித்த எவர்கிரீன்

கடந்த மார்ச் மாதம் எகிப்தின் சூயஸ் கால்வாய் உலக வர்த்தகத்தை ஒரு கை பார்த்துவிட்டது. சர்வதேச பத்திரிகைகள் அனைத்தும் சூயஸ் கால்வாய் குறித்த செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. கொரோனாவால் தூங்கிக்கிடந்த உலகை தலைப்புச் செய்தி மூலம் தட்டி எழுப்பிய பெருமை எவர்கிவன் எனும் கப்பல் நிறுவனத்தையே சாரும்.

The Suez Canal Got Blocked By A Big Ship

உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர் கிவன், கடந்த மார்ச் 23ஆம் தேதி, காற்று பலமாக வீசியதால் சூயஸ் கால்வாயை அடைத்துக் கொண்டது. இந்த 400 மீட்டர் நீளமான சரக்குக் கப்பலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ஆறு நாட்கள் கழித்து, மீண்டும் மிதக்க வைக்கப்பட்டது. இந்த முயற்சியின்போது ஒருவரை உயிர்பலி கொடுக்கவும் நேரிட்டது. உலக வர்த்தக்கத்தையே ஆட்டிப்பார்த்த இந்த கப்பலின் உரிமையாளரான ஷோய் கிசனிடம், மீட்பு நடவடிக்கைகளுக்கான செலவுகள், சூயஸ் கால்வாயின் கரையில் ஏற்பட்ட சேதாரம் என பலவற்றுக்கும் நஷ்ட ஈடு கோரப்பட்டது. நஷட ஈடு வழங்கினால் மட்டுமே கப்பல் விடுவிக்கப்படும் என கூறி 3 மாதங்களுக்கு எகிப்து நாடு அதனை சிறைபிடித்து வைத்து பின்னர் விடுவித்தது.

Massive Ship MV Ever Given Blocking Suez Canal Costs About $400 Million An  Hour

சூயஸ் கால்வாய் ஏன் முக்கியம்?

ஆசிய ஐரோப்பிய கண்டங்களை இணைக்க சூயஸ் கால்வாய் மிகவும் உதவுகிறது. சர்வதேச வர்த்தக சரக்குகளில் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்வதாக கூறப்படுகிறது. சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா – ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும். இது கூடுதலாக 10 நாட்களுக்கும் அதிகமாக பிடிக்கும். ஐரோப்பாவிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் செல்வதால் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் குறைகிறது.

உயிர் குடித்த சூயஸ் கால்வாய்

சூயஸ் கால்வாய்க்கான கட்டுமானப் பணி 1859ம் ஆண்டு தொடங்கியது. கிட்டதட்ட 10 வருடங்களாக இந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பலர் அடிமைகள் எனவும் கூறப்படுகிறது.

Global Highway: 150 years of the Suez Canal | Middle East | News and  analysis of events in the Arab world | DW | 17.11.2019

கட்டுமானப் பணியின்போதே காலரா நோய் மற்றும் விபத்துகளால் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை இந்த சூயஸ் கால்வாய் பறித்துக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது. சூயஸ் கால்வாயை கைப்பற்ற உலக நாடுகளிடையே பல கட்ட போர்களும் நிகழ்ந்திருக்கின்றன. அதிலும் எண்ணற்றவர்கள் மடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க.!