Tamil Reader

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் – நடந்தது என்ன?

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகளை அதிபராக பொறுப்பேற்றதும் ஜோ பைடன் திரும்பப்பெற்றார். இதனால் படிப்படியாக அமெரிக்க ராணுவம் சொந்த நாட்டிற்கு திரும்பியது. இதனை சாதகமாக்கிக் கொண்ட தாலிபான்கள் மெல்ல மெல்ல ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை பெரிய எதிர்ப்புகளின்றி கைப்பற்றத் தொடங்கியது. ஆஃப்கானிஸ்தானில் முக்கிய மாகாணங்கள் பலவற்றை கைப்பற்றிய தாலிபான் படையினர் நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்தனர். ராணுவ தாக்குதல் மூலம் காபூலுக்குள் நுழைய விரும்பவில்லை என்று தெரிவித்த தாலிபான் அமைப்பினர், நகருக்கு வெளியிலேயே காத்திருந்தனர். இதையடுத்து அதிபர் அஷ்ரப் கனியுடன் அதிபர் மாளிகையில் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக தீர்வு எட்டப்படாததால் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

Afghanistan news live: Taliban enter Kabul, say they don't plan to take it by force
அதிபர் அஷ்ரப் கனி

தொடர்ந்து காபூலுக்குள் நுழைந்த தாலிபான் படையினர் அதிபர் மாளிகையை கைப்பற்றி ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்தனர். மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனவும் தாலிபான்கள் குழு தெரிவித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரக அதிகாரிகளை உடனடியாக உலக நாடுகள் பத்திரமாக திரும்பப்பெற்றது. மேலும் சொந்த நாட்டு மக்களை விமானம் மூலம் நாடு திரும்பவும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதின. ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த இந்தியர்கள் 129 பேரை ஏர் இந்தியா விமானம் நேற்று டெல்லி கொண்டு வந்து சேர்த்தது. மக்களை பாதுகாக்காமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதால் அதிபர் அஷ்ரப் கனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. வரும் 19ம் தேதி ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய நாளிலேயே புதிய ஆட்சி பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க.!