Tamil Reader

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் – கின்னஸ் சாதனை படைத்த பெண்..!

babe

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோசியாம் தாமரா சித்தோல் (37) என்னும் பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். இதன்மூலம் ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தவர் என்னும் கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ் என்பவருக்கு 9 குழந்தைகள் பிறந்ததே கின்னஸ் சாதனையாக இருந்துவந்தது.

சித்தோலுக்கு பிறந்த குழந்தைகளுள் 7 ஆண்குழந்தை 3 பெண்குழந்தைகளும் அடக்கம். இதுகுறித்துப் பேசிய அவருடைய கணவர் டேபோஹோ செட்சி,” நாங்கள் 8 குழந்தைகளை எதிர்பார்த்தோம். ஆனால் அதிர்ஷடவசமாக எங்களுக்கு 10 குழந்தைகள் பிறந்திருக்கின்றன” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது 10 குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கும் சித்தோலுக்கு ஏற்கனவே ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்துப் பேசிய அவர்,” நான் கடவுளிடம் பிரார்த்தித்துக்கொண்டேன். வேண்டியபடியே குழந்தைகள் நல்லபடியாக பிறந்திருக்கின்றன. நான் வெளிப்படுத்த முடியாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க.!