Tamil Reader

சவூதி இளவரசருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு..!

Saudi Crown Prince

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு தன்னுடைய தாத்தாவும் சவூதி அரேபியாவின் தந்தையுமான அப்துல் அஜீஸ் அவர்களுடைய பெயரை வைத்திருப்பதாக சல்மான் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட சல்மான் தற்போது அப்துல் அஜீஸ் வருகையின் மூலம் 5 வது முறையாக மீண்டும் தந்தையாகியுள்ளார்.

இளவரசரின் சகோதரர் சவுத் குழந்தை பிறப்பையொட்டி,”அல்லாஹ் அவனை மகிழ்ச்சியின் குழந்தையாக ஆக்கி, அவனை ஆசீர்வதித்து, அவனது பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்” என வாழ்த்தியுள்ளார்.

சவூதி இளவரசருக்கு ஆண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் பொது மக்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க.!