Tamil Reader

சர்வதேச விமான பயணத் தடையை விலக்கிக்கொண்டது சவூதி அரேபியா: ஆனால் இவையெல்லாம் கட்டாயம்..!

FLIGHT

கொரோனா வைரசின் புதிய வகை ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியதை அடுத்து தனது நில, நீர் மற்றும் வான் எல்லைகளை மூடுவதாக கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அறிவித்தது சவூதி அரேபியா.

முதலில் ஒரு வாரத்திற்கு எல்லைகளை மூடிய அந்நாட்டு அரசு அதன்பின்னர் அத்திட்டத்தை மேலும் 1 வார காலம் நீடித்தது. இன்றோடு (3/1/2021) தடைக்காலம் முடிவதையொட்டி இன்று காலை 11 மணிமுதல் தனது எல்லைகளை மீண்டும் திறப்பதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அந்நாட்டு அரசு கீழக்கண்ட பாதுகாப்பு விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • புதிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சவூதி உட்கட்டமைத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து சவூதிக்கு வர விரும்புபவர்கள், தங்களது நாடுகளுக்கு வெளியே 14 நாட்கள் தங்கியிருந்திருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் கொரோனா PCR பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டு தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • புதிய கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து மனிதநேய மற்றும் அவசர காரணங்களுக்காக சவூதி வரும் குடிமக்கள் மற்றும் பயணிகள் 14 நாட்கள் அவர்களது வீடுகளில் குவாரண்டைன் செய்துகொள்ள வேண்டும். சவூதிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் ஒருமுறையும், குவாரைண்டைனின் இறுதியிலும் (13 வது நாள்) PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • புதிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வழக்குகளைக் கொண்ட நாடுகளில் இருந்து சவூதி வரும் பயணிகள் 7 நாட்கள் அவர்களது வீடுகளில் குவாரண்டைன் செய்துகொள்ள வேண்டும். சவூதிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் ஒருமுறையும், குவாரைண்டைனின் இறுதியிலும் (6 வது நாள்) PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே பின்பற்றப்பட்டுவந்த நடவடிக்கைகள் பொருந்தும். (7 நாட்களுக்கு வீடுகளில் குவாரண்டைன் செய்துகொள்ளுதல் அல்லது 3 நாட்கள் குவாரைண்டைன் செய்துகொள்ளுதல் மற்றும் PCR பரிசோதனை எடுத்தல் போன்றவை)

இதையும் படிங்க.!