சவூதி அரேபியாவில் 10 பேருக்கு புதியவகை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது அல் அப்துல் அலி இதுகுறித்துப் பேசுகையில், அவர்கள் தற்போது பூரண குணமடைந்திருக்கிறார்கள். அவர்களை மிக கவனமாக நாங்கள் கண்காணித்துவருகிறோம்” என்றார்.
அந்த 10 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 27 பேரை அமைச்சகம் குவாரண்டைனில் வைத்திருக்கிறது. அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்திருந்தாலும் பாதுகாப்பு கருதி அவர்களுக்கான குவாரண்டைன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அலி தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் சவூதியில் புதியவகை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாருமில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 98 சதவிகிதம் குறைந்துள்ளதாக அலி குறிப்பிட்டார்.
1 மில்லியன் மக்கள் செஹாட்டி (Sehhaty) அப்ளிகேஷன் மூலமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விண்ணப்பித்திருப்பதாகவும் இதுவரையில் 137,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அலி தெரிவித்தார்.