Tamil Reader

வெளிநாடுகளில் இருந்து சவூதி அரேபியா வருபவர்களுக்கு குவாரண்டைன் கிடையாது – அந்நாட்டு அரசு அறிவிப்பு..!

flight

மே 20 ஆம் தேதிமுதல் வெளிநாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்து மூலமாக சவூதி அரேபியாவிற்கு வரும் விசிட்டர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு குவாரண்டைன் கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், மற்றும் அமீரகம் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு சவூதி அரசால் விதிக்கப்பட்ட போக்குவரத்துத்தடை தொடர்வதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மே 20 ஆம் தேதிமுதல் தகுதியுள்ள நாடுகளில் இருந்து சவூதிக்கு வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டு பின்னர் குணமானவர்களுக்கு குவாரண்டைன் விதிக்கப்படாது. அவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சவூதி செல்லும் பயணிகளுக்கு அவர்களுடைய நாடுகளைப் பொறுத்து அவர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் குவாரண்டைன் விதிக்கப்பட்டுவருகிறது. அதேபோல அவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் சமர்ப்பிக்கவேண்டும்.

சவூதி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி அந்நாட்டிற்கு செல்லும் 8 வயதிற்குக் குறைவான வயதுடைய தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத குழந்தைகள் அவர்களது சொந்த செலவில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் 6 ஆம் நாள் PCR பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டு நெகட்டிவ் சான்றிதழைப் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை உள்ளடக்கிய மருத்துவக் காப்பீடும், சவூதிக்கான தங்களது பயணத்திற்கு முன்பான 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் பயணி வைத்திருக்கவேண்டும்.

முன்னதாக 13 நாடுகளில் சிக்கிக்கொண்ட சவூதி குடிமக்கள் நேரடியாகவோ, பிற நாடுகள் வழியாகவோ சவூதிக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. அந்நாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • லிபியா
  • சிரியா
  • லெபனான்
  • ஏமன்
  • ஈரான்
  • துருக்கி
  • ஆர்மீனியா
  • சோமாலியா
  • காங்கோ ஜனநாயக குடியரசு
  • ஆப்கானிஸ்தான்
  • பெலாரஸ்
  • இந்தியா

கடந்த பிப்ரவரியில் 20 நாடுகளில் உள்ள ராஜாங்க அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் சவூதி குடிமக்கள் ஆகியோர் தவிர்த்து பிறர் வருவதை அந்நாட்டு அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!