Tamil Reader

பொது இடத்தில் Prank Show – 4 பேரை கைது செய்த சவுதி அரசு!

பொதுமக்களை சிரிப்பூட்டும் விதமாக ஒருகாலத்தில் அமைந்த Prank Showக்கள் ரசிக்கும் படியாக இருந்தன. ஆனால் தற்போது யூடியூப் போன்ற சமூக வலைதளங்களின் பெருக்கத்தால் வியூஸ் மோகத்தில் பலரும் பல விதமாக Prank செய்து சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியாவில் 4 பேர் முகமூடி அணிந்து பேய் போன்று நடித்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக Prank செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை இணையத்திலும் பகிர்ந்துள்ளனர். Prank வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட 4 பேரையும் ரியாத் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கைதான இளைஞர்கள் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர்கள் என கூறப்படுகிறது. மக்களுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தம் விதமாக நடந்து கொண்டதால் 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது

இதையும் படிங்க.!