Tamil Reader

தவறுதலாக அனுப்பப்பட்ட பணம்: ஒரே இரவில் கோடீஸ்வரரான இளைஞர்..!

Euro

ஓவர் நைட்டில் அம்பானியாகி இருக்கிறார் எகிப்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். பெல்ஜியத்தில் வசித்துவரும் எகிப்தைச் சேர்ந்த அஹ்மத் காத் அல் ராப் (Ahmed Gad Al Rab) மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

அவருடைய நிறுவனத்தில் இருந்து தவறுதலாக 760,000 யூரோக்கள் அகமதிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. உடனயே அவருக்கு நிறுவனத்தில் இருந்து வந்த அழைப்பில், தெரியாமல் பணம் அனுப்பிவிட்டதாகவும், அதனை திரும்பித் தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

நேர்மை தவறாத அகமதும், மொத்த பணத்தையும் நிறுவனத்திற்கே அனுப்பியிருக்கிறார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதனை, குறிப்பிட்டு ஒரே இரவில் தான் மில்லியனர் ஆகிவிட்டதாக கேலியுடன் பதிவிட்டிருக்கிறார்.

அத்தோடு பணத்தை திரும்பிக் கொடுத்தததையும் புகைப்படமாக அப்பதிவில் இணைத்துள்ளார். அவரது இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க.!