Tamil Reader

8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம்விட்ட ரியல் சிங்கப்பெண் – மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாய் நிகழ்ந்த உன்னத சம்பவம்!

போலந்து நாட்டைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீராங்கனையான மரியா ஆண்ட்ரேஜிக் கடந்த 2018ம் ஆண்டு எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை எடுத்துக் கொண்டே மனம் தளராமல் தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்திய மரியாவுக்கு 2020 ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வதே இலக்காக இருந்தது. மனதளவில் உறுதியாக போராடிய மரியா, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 64.61மீ தூரம் வீசி ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Polish javelin thrower Maria Andrejczyk auctions her Tokyo Olympics silver medal to help fund baby's heart surgery | Other Sports News | Zee News

விடா முயற்சி, கடின உழைப்பின் பலனாய் கிடைத்த அந்த பதக்கத்தை வைத்து மரியா செய்த காரியம்தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. போலந்து நாட்டைச் சேர்ந்த பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா என்ற ஆண் குழந்தையின் இருதய அறுவைசிகிச்சைக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், அந்தத் தொகையை ஈட்ட முடியாமல் அவரது பெற்றோர் சமூக வலைதளங்களில் உதவி கோரியதையும் மரியா அறிந்துள்ளார். குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிவு செய்த மரியா, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாத சூழலிலும் ஆசை ஆசையாய் பல ஆண்டுகால உழைப்பிற்கு பின்னர் கிடைத்த ஒலிம்பிக்ஸ் வெள்ளிப்பதக்கத்தை ஏலம் விட்டு பணம் திரட்ட எண்ணினார். போலாந்தைச் சேர்ந்த சப்கா எனும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1.25 லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்தி மரியாவின் பதக்கத்தை வாங்கிக் கொண்டது. பதக்கம் வீட்டில் இருந்து தூசி அடைவதை விட குழந்தையின் உயிரை காப்பாற்றுவதையே உன்னதமாக நினைப்பதாக கூறி மரியா அந்த தொகையை குழந்தையின் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். உண்மையை அறிந்த சப்கா நிறுவனம், உடனடியாக வெள்ளிப்பதக்கத்தை மரியாவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது. தாங்கள் வழங்கிய பணத்தை திருப்பி தர வேண்டாம் என்றும் உங்களின் மனிதநேய செயல் எங்களை நெகிழ வைப்பதாகவும் மரியாவை சப்கா நிறுவனம் போற்றி புகழ்ந்துள்ளது. ஒலிம்பிக்ஸில் வென்ற வெள்ளிப்பதக்கம் உங்களிடமே இருக்கட்டும் எனக்கூறி அதை மரியாவிடமே ஒப்படைத்து சப்கா நிறுவனத்திற்கும் உதவி என்ற உடன் ஓடோடி வந்து பதக்கத்தையே ஏலம் விட்ட மரியாவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாய் நிகழ்ந்த இந்த உன்னத சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது

இதையும் படிங்க.!