Tamil Reader

2021 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா தேர்வு – நான்காம் இடம் பிடித்த இந்தியப்பெண்..!

miss uneiverse

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற 69 வது மிஸ் யுனிவெர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா 2021 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

73 போட்டியாளர்களுடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் மிஸ் மெக்ஸிகோவான மெசா முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளார். இவருக்கு கடந்தவருடம் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சொசொபினி துன்ஷி மகுடம் அணிவித்து அவரை வெற்றியாளராக அறிவித்தார்.

மெசாவின் இந்த வெற்றியின் மூலமாக மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் பெரும் மூன்றாவது மெக்சிகோவைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்தப் போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவைச் சேர்ந்த மிஸ் இந்தியாவான அடிலின் கேஸ்டிலோனா நான்காம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பிரேசிலைச் சேர்ந்த மிஸ் பிரேசிலான ஜூலியா காமா இரண்டாவது இடத்தையும் பெரு நாட்டைச் சேர்ந்த மிஸ் பெருவான பானிக் மேசிடா டெல் கேஸ்டிலோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இதையும் படிங்க.!