Tamil Reader

கொரோனாவையே மிஞ்சும் மார்பர்க் – கொடிய வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் எனும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா, கொரோனா போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளவால்களில் இருந்து முதலில் பரவியிருக்கலாம் என சொல்லப்பட்டுள்ள இந்த மார்பர்க் எனும் கொடிய வைரஸ் 88% வரை இறப்பு விகிதம் கொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, தெற்கு குக்கெடோ மாகாணத்தில் மார்பர்க் வைரஸ் நோய் காரணமாக இறந்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Marburg virus, a highly infectious disease, detected in West Africa for first time | World News | Zee News

கொரோனாவை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாகரமான வைரஸ் என சொல்லப்படும் மார்பர்க் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ள நிலையில் தற்போது புதிய வகை வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க.!