Tamil Reader

இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் : உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி என நீங்கள் கருதுவது எவற்றை?

International Happiness Day

மகிழ்ச்சி. இந்த ஒற்றைச் சொல் தான் உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஆண் – பெண் மகிழ்ச்சியில் தழைக்கத் துவங்கிய மானுடம் மகிழ்ச்சியைப் பெற எத்தனித்த செயல்களே இன்று வரலாறாக நமக்குப் போதிக்கப்படுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் மனிதன் மகிழ்ச்சியைத் தேடியே ஓடுகிறான். ஒவ்வொருவரும் பணம், வசதி, வேலை என ஏதோவொன்றில் தங்களது மகிழ்ச்சி இருப்பதாக எண்ணிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான மகிழ்ச்சி நம்முள் ஒளிந்திருக்கிறது என்பதே உலகத்தை வழிநடத்திய பலரின் பதிலாக இருந்திருக்கிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதியன்று ஐ.நா பொதுச் சபை மார்ச் 20 ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.

வறுமை, பசி, பெருநோய் என எத்தனை இடர்கள் வந்தாலும், மகிழ்ச்சியை நோக்கி மனிதகுலத்தை நகர்த்துவதே ஓர் உலக குடிமகனின் கடமையாகும். அதுமட்டுமே தன்னிறைவான சமத்துவம் மிக்க எதிர்கால சமுதாயத்தை நாம் அடைய ஒரே வழியும் கூட.

அனைவருக்கும் எங்களது ஆசிரியர் குழு சர்வதேச மகிழ்ச்சி தின வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. உங்களுடைய வாழ்வில் நீங்கள் மகிழ்ச்சி என கருதுவதை கமெண்ட் செய்யுங்கள்.

இதையும் படிங்க.!