Tamil Reader

“என்னை ஏமாற்றிவிட்டாள்…என் மனைவியைக் கைது செய்யுங்கள்” : புகார் கொடுக்க வந்த 19 கணவர்கள் – அதிர்ந்துபோன காவல்நிலையம்..!

Marriage

உட்புற மங்கோலியாவில் இருக்கும் கிராமப் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் அன்றும் வழக்கம்போல சமூக வலைத்தளத்தில் மூழ்கியிருந்தார். அப்போது திருமண வீடியோ ஒன்றினைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். காரணம் வீடியோவில் மணப்பெண்ணாக இருந்தது அவரது மனைவி. ஆம். லீ என்னும் தரகர் மூலமாக அந்தப் பெண்ணை சந்தித்திருக்கிறார் பாதிக்கப்பட்டவர். அவருடைய குடும்பத்தாரும் திருமணத்திற்கு ஓக்கே சொன்னதால் ஜனவரி மாதம் இருவருக்கும் இடையே உள்ளூர் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது.

திருமணத்தை அவர் பதிவுசெய்யவில்லை. இதனிடையே திருமணத்திற்கு முன்பாக 148,000 யோன்களை வரதட்சணையாக அந்தப் பெண் கேட்டிருக்கிறார். நம்ம ஊர் காசுக்கு கணக்குப்போட்டால் 16.9 லட்ச ரூபாய். கல்யாண குஷியில் மணமகனும் அளித்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகும் தனது சொந்த ஊரில் சில சொத்து சிக்கல்கள் இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு விரைவில் வருவதாகவும் கணவரிடம் தெரிவித்திருக்கிறார். இப்படியே மாதங்கள் கடந்திருகின்றன. அப்படி இருவரும் பிரிந்திருந்த ஒரு நாளில் தான் வீடியோவைப் பார்த்திருக்கிறார் கணவர்.

அதிர்ந்துபோய் அதில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்குச் சென்றபோது, அவரது மனைவி கல்யாணக் கோலத்தில் இன்னொரு மணமகனுடன் இருந்திருக்கிறார். இதனையடுத்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் கணவர். (அதாவது நாம் முன்பே பார்த்தவர்) அவர் முதலாவது கணவனும் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதுவரையில் அந்தப் பெண் 19 ஆண்களைத் திருமணம் செய்திருப்பதும், அனைத்து கணவர்களும் இப்பெண்ணைத் தேடுவதும் தெரியவந்திருக்கிறது. இப்படி மானாவாரியாக நடைபெற்ற திருமணங்களின் மூலமாக 2.28 கோடி வரையில் அந்தப் பெண் சம்பாதித்திருக்கிறார்.

இந்தப் பெண்ணினால் பாதிக்கப்பட்ட இவருடைய மாஜி கணவர்கள் வரிசையாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

இதனையடுத்து மணப்பெண், தரகர், இதற்கு உடந்தையாக இருந்த சிலரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. மணப்பெண்ணின் உறவினர்களாக இவர்கள் நடித்ததாக “கணவர்கள்” தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க.!