Tamil Reader

20 வருடங்களுக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற இந்தியப் பெண்..!

missuniversejpg

இஸ்ரேலில் நடைபெற்ற 70 வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சந்து (21) பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார். ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.

இதற்கு முன்னர், இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!