Tamil Reader

ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 300க்கும் மேற்பட்டோர் பலி!

காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் பூமி புதிய சிக்கல்களை சந்தித்து வருகிறது. காட்டுத்தீ, பெருமழை வெள்ளம், நிலச்சரிவு என தொடர்ந்து அடுத்தடுத்த இயற்கை பேரிடரால் மக்கள் பலியாகி வந்த நிலையில் ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் இரையாகியுள்ளனர். ஹைதி தீவின் தலைநகர் போர்ட் பிரின்ஸில் இருந்து மேற்கு பகுதியில் 125 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

At least 304 dead after 7.2-magnitude earthquake strikes Haiti, officials say

சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்ரி நேரடியாக களத்திற்கு விரைந்து பார்வையிட்டார். ஒட்டுமொத்த நாட்டுக்கு ஒரு மாதத்திற்கு அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அவர் அறிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் உண்மையான பாதிப்புகள் என்ன என தெரியாத நிலையில் சர்வதேச நாடுகளிடம் உதவிகளை கேட்கப்போவதில்லை என கூறினார். இதுவரை சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

2021 Haiti earthquake - Wikipedia

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஹைதி நாட்டிற்கு உலக நாட்டுத் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு இதே ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 3 லட்சம் பேர் மடிந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க.!