Tamil Reader

விண்வெளிக்கு டூர் சென்ற 4 பேர் – இனி அடிக்கடி சென்று வர திட்டம்!

விண்வெளி பயணம் என்பது ஒருகாலத்தில் ஆராய்ச்சிக்காக மட்டும் இருந்த நிலை மாறி தற்போது சுற்றுலா பயணமாகவே மாறிவிட்டது. விண்வெளிக்கு சுற்றுலா செல்ல விருப்பப்படும் மக்களுக்கு வரமாக மாறி இருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். உலக பணக்காரர்கள் வரிசையில் 2ம் இடத்தில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பி வரலாறு படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.32 மணிக்கு ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து ஃபால்கன் ராக்கெட் 4 சுற்றுலாப்பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

SpaceX Falcon 9 Rocket launches 60 more Starlink Internet Satellites to Orbit

ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள விண்கலம் தனியாகப் பிரிந்து, புவியின் நீள்வட்டப்பாதைக்குள் நுழைந்தது. பூமியிலிருந்து 575 கிலோ மீட்டர் உயரத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பூமியை சுற்றி வரும் இந்த விண்கலம், 4-வது நாளில் செப்டம்பர் 18ம் தேதி அட்லாண்டிக் கடலில் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விண்வெளி சுற்றுப்பயணம் வரும் காலங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SpaceX launches first amateur astronaut crew into space - La Prensa Latina Media

இந்த விண்வெளிச் சுற்றுலாவில் தொழிலதிபர் ஜார்ட் ஐசக்மேன், மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ் மற்றும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ் செம்ப்ரோஸ்கி, சியான் ப்ராக்டர் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். இதில், மருத்துவர் ஆர்சனாக்ஸ் செயற்கைக்காலுடன் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க.!