Tamil Reader

எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்.. பீட்சா டெலிவரி பாயாக மாறிய ஆப்கன் முன்னாள் அமைச்சர்!

ஆப்கானிஸ்தானில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் சையத் அகமத் ஷா. இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதிபராக இருந்த அஷ்ரப் கானி உடனான கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெர்மனியில் குடிபெயர்ந்தார். தற்போது அவர் ஜெர்மனியில் உள்ள லைப்சிக் நகரில் பீட்சா டெலிவரி பாயாக பணியாற்றி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆரஞ்சு சீருடையில் ஒரு சைக்கிளில் பீட்சா பேக் மாட்டியபடி சையத் அகமது இருக்கும் புகைப்படங்கள் பேசு பொருளாக மாறியுள்ளது. 2005 முதல் 2013 வரை தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் தலைமை தொழில்நுட்ப ஆலோசகர், அமைச்சர் உட்பட பல அரசு பதவிகளை வகித்துள்ள சையத் அகமது, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலை பட்டங்களும் பெற்றுள்ளார்.

Image

இது குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சையத் அஹமது, ஜெர்மனியில் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் எளிமையாக வாழ விரும்பி இந்த தொழிலை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். எங்கும் வேலை கிடைக்காததால் பீட்சா டெலிவரி வேலை செய்து இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மேற்கொண்டு படிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் பீட்சா டெலிவரி செய்வது மட்டுமின்றி கல்வியில் அதீத ஆர்வம் கொண்டு விளங்குவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க.!