Tamil Reader

நண்பன்னா இப்டி இருக்கனும் – தனி ஆளாக தங்கம் வெல்ல வாய்ப்பு கிடைத்தும் விட்டுக்கொடுத்த கத்தார் வீரர்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் 30 வயது கத்தார் வீரர் பர்ஷீமும் 29 வயது இத்தாலி வீரர் டாம்பேரியும் இறுதிவரை போட்டிபோட்டனர். இருவருமே 2.37 மீட்டர் வரை உயரம் தாண்டியிருந்த நிலையில் 2.39 மீட்டர் உயரம் தாண்டும்போது 3 முறை சொதப்பினர். இதனால் டைப்பிரேக்கர் முறையை கடைபிடிக்க நடுவர் முடிவு செய்தார். ஆனால் இத்தாலி வீரருக்கோ காலில் காயம் ஏற்பட்டிருந்தது. கத்தார் வீரர் நினைத்திருந்தால் டைப்பிரேக்கருக்கு சம்மதித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றிருக்க முடியும். ஆனால் நடந்ததோ வேறு! கத்தார் வீரர் பர்ஷீம் நடுவரிடம் தங்கப்பதக்கத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள முடியுமா என வினவ, நடுவரும் ஆம் செய்யலாம் என பதிலளித்தார்.

உடனே சட்டென யாரிடமும் கலந்தாலோசிக்காமல் டைப்பிரேக்கர் தேவையில்லை. தங்கப்பதக்கத்தை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்கிறோம் என கத்தார் வீரர் சொல்ல, ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்ற டாம்பேரி பர்ஷீமை கட்டி அணைத்து தரையில் உருண்டு பிரண்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.

Tokyo 2020: Yes, you can have two golds | Olympics - Hindustan Times

என்னைப் போன்றே சிறந்த விளையாடிய எனது நண்பன் டாம்பரேவும் தங்கம் வெல்ல தகுதியானவன் தான் என்றும் பர்ஷீம் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவருமே ஒலிம்பிக்ஸ்க்கு முன்னதாகவே நன்கு பரிச்சயமான நண்பர்கள். விளையாட்டின் ஆகச்சிறந்த பரிசான தங்கத்தையே நண்பருடன் பகிர்ந்து கொண்ட கத்தார் வீரர் பர்ஷீம் உண்மையில் எவ்வளவு தங்கமானவர்….

இதையும் படிங்க.!