Tamil Reader

குளிர்பான பிரியர்களே உஷார்… ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை பத்தே நிமிடத்தில் குடித்தவர் 6 மணி நேரத்தில் மரணம்!

சீனாவில் வெயிலுக்கு இதமாக 21 வயது இளைஞர் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை பத்தே நிமிடத்தில் குடித்துள்ளார். அதிகளவு வாயு பானத்தை குடித்ததால் திடீரென அந்த இளைஞருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் உள்ள குடல் மற்றும் வயிற்றுப்பகுதியில் அதிகளவு வாயு தங்கியிருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவரது இதயத்துடிப்பு அதிகமானதோடு ரத்த அழுத்தம் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அதிகளவு வாயுவால் ஏற்பட்ட பாதிப்பால் மருத்துவமனையிலேயே இளைஞர் உயிரிழந்தார்.

வெயில் காலத்தில் வாயுக்கள் அதிகம் நிரம்பிய குளிர் பானங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இயற்கை பழச்சாறுகளை அருந்துவது சிறந்தது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கோலா, பெப்சி பிரியர்கள் இடைவேளிவிட்டு பானங்களை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

 

இதையும் படிங்க.!