Tamil Reader

“இது மனிதர்களுக்கு பரவாது-னு நெனச்சோம்” – சீனாவில் புதிய வைரசால் ஒருவர் பாதிப்பு – உலக நாடுகள் அதிர்ச்சி..!

Bird-flu_

சீனாவிலிருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் என்னும் புயல் ஒட்டுமொத்த உலகத்தையும் கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் ஜென்ஜியாங் பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவருக்கு H10N3 என்ற வகையைச் சேர்ந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீன சுகாதார ஆணையம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜென்ஜியாங் நகரில் 41 வயது நபருக்கு கடந்த ஏப்ரல் 28-ம் தேதி பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது உடல்நலம் தேறியுள்ளது. விரைவில் அவர் வீடு திரும்புவார். அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். அவரோடு தொடர்பில் இருந்தவர்களை தேடி வருகிறோம். இந்தவகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது அரிது”.

ஆனால் எவ்வாறு இந்த வைரஸ் பரவியது என்பது குறித்து அந்நாட்டு அரசு இன்னும் வாய்திறக்கவில்லை. அதேநேரத்தில் இதற்கு முன்னரும் சீனாவில் பறவைக் காய்ச்சல்களால் பலர் இறந்துள்ளனர்.

கடந்த 2016-17-ம் ஆண்டில் H7N9 வைரஸ் பறவைக் காய்ச்சலால் 300 பேர்உயிரிழந்தனர். கோழிப்பண்ணை ஊழியர்களே பறவைக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த பிப்ரவரியில் சீனாவின் லியான்யங்கங் நகரில் H5N8 என்ற பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இது மனிதர்களை எளிதில் தொற்றும் தன்மைகொண்டது.

தற்போது சீனாவில் முதல்முறையாக H10N3 வைரஸ் வகை பறவைக்காய்ச்சல் மனிதருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் பலவும் அதிர்ச்சியடைந்துள்ளன.

இதையும் படிங்க.!