Tamil Reader

வீடியோ கேம் விளையாட கட்டுப்பாடு – சீன அரசு அதிரடி!

உலகின் சுறுசுறுப்பான மக்களாக திகழும் சீனர்கள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்ச்சி வியக்க வைத்த பெருமைக்காரர்கள். வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் வீடியோ கேம் வர்த்தகமும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் குழந்தைகள் அதிகளவில் வீடியோ கேம்களில் மூழ்கி வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு உலகிலேயே முதல் முறையாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வீடியோ கேம் விளையாடுவதற்கு சீன அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி திங்கட் கிழமை முதல் வியாழன் வரை பள்ளி மாணவர்கள் வீடியோ கேம் விளையாடுவது சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக் கிழமை ஒரு மணி நேரமும், வார விடுமுறை நாட்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் என வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும். சீனாவின் கட்டுப்பாட்டிற்கு பெற்றோர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

இதையும் படிங்க.!