Tamil Reader

ஆப்பிள்-னா சார்ஜர் கொடுக்க மாட்டீங்களா? – ஐபோன் 12 போனுக்கு சார்ஜர் கொடுக்காததால் ஆப்பிள் நிறுவனத்திற்கு 14 கோடி ரூபாய் அபராதம் விதித்த அரசு..!

Iphone 12

ஐபோன் 12 உடன் சார்ஜர் கொடுக்காததால் பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு முகமையான Procon-SP, ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (நம்மூர் காசுக்கு 14 கோடி ரூபாய்)  அபராதம் விதித்துள்ளது.

திசைதிருப்பும் வகையில் விளம்பரம் செய்து, சார்ஜர் இல்லாமல் போனை விற்பனை செய்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. சரி, சார்ஜர் வைக்காததினால் போனின் விலையைக் குறைத்திருக்கிறீர்களா? என Procon-SP ஆப்பிளிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் ஆப்பிளிடம் இருந்து இன்னும் இதுகுறித்து எந்தவித தகவலும் தரப்படவில்லை.

இதுகுறித்துப் பேசிய Procon-SP யின் இயக்குனர் ஃபெர்னாண்டோ கேபஸ்,” பிரேசிலில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் திண்மை வாய்ந்தவை என்பதை ஆப்பிள் நிறுவனம் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஆனால்.. ஐபோன் 12 வெளியானபோதே அதாவது கடந்தாண்டு அக்டோபரில் இந்த போனுடன் சார்ஜர் மற்றும் ஹெட்போன் வழங்கப்படமாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த சார்ஜர் மற்றும் ஹெட்போன் வழங்குவதால் 2 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் குப்பைகள் தேங்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்தது. இந்தக் கழிவு என்பது ஆண்டுக்கு 450,000 கார்களை அகற்றுவதற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் பவர் அடாப்டர் மூலமாக வயர்லஸ் சார்ஜிங் முறையைப் பயன்படுத்துவதால், போனுடன் சார்ஜர் வைப்பது அவசியமில்லாதது என ஆப்பிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் லிசா ஜாக்சன் முன்னர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் பிரேசில் வைத்த இந்த சமீபத்திய வேட்டு குறித்து, ஆப்பிள் இன்னும் வாய் திறக்கவில்லை.

இதையும் படிங்க.!