Tamil Reader

அப்படியா விஷயம் – அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆப்கன் குழந்தை மீண்டும் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது!

ஆப்கானிஸ்தானை தாலிபான்களை கைப்பற்றியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. காபூல் விமான நிலையம் போர்க்களம் போல காட்சியளித்தது. ஆப்கனில் இருந்து வெளியேற மக்கள் போட்டிப்போட்டு கொண்டு விமானங்களில் ஏற முண்டியடித்தனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கைக்குழந்தை ஒன்றை ஆப்கன் பெற்றோர் அமெரிக்க படையிடம் ஒப்படைக்கும் காட்சி இணையத்தில் வைரலானது. குழந்தையை பாதுகாக்க அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் குழந்தையின் உயிரை கருதி அதனை பெற்றெடுத்தோர் அமெரிக்க படை வீரர்களுக்கு தானமாக வழங்கி விட்டனர் எனவும் பலவாறாக பேசப்பட்டு வந்தது. இது குறித்து தற்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவே குழந்தையை ஆப்கன் பெற்றோர் அமெரிக்க படையிடம் ஒப்படைத்ததாகவும், தற்போது அந்த குழந்தை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றோர்களிடம் மீண்டும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்களை பரப்ப வேண்டாம் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாலிபான்களுக்கு அஞ்சி கைக்குழந்தைகளை அமெரிக்க படைகளுக்கு பெற்றோர்கள் தானமாக வழங்கி வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி நெட்டிசன்களின் கடும் கோபத்திற்குள்ளான வீடியோ காட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க.!