தமிழகத்தில் இரண்டு COVID-19 இறப்புகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) பதிவாகியுள்ளன.
அதில் துபாயில் இருந்து சென்னை திரும்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
அதேபோல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் ஒருவரும் இன்று பலியானார்.
இந்த இரண்டு உயிரிழப்புகளையும் சேர்த்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் (மார்ச் 5) 86 பேருக்கு COVID-19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.