Tamil Reader

திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!

திருச்சி விமான நிலையத்தின் சரக்கு முனையம், நிர்வாக காரணங்களுக்காக நாளை ஜனவரி 9ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

எனவே, விமான நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும், பயண முகவர்களும் திருச்சி சர்வதேச விமான சரக்கு முனையம் மூலம் ஏற்றுமதி செய்ய எந்த விதமான சரக்குகளையும் முன்பதிவு செய்யவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சரக்கு முனையம் மீண்டும் எப்போது செயல்படும் என்பது குறித்த மறு அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் எஸ். தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!