Tamil Reader

திருச்சி விமான நிலையத்தில் இரவில் விமானங்களை இயக்கத் தடை..!

new-passenger-terminal-building-of-trichy-airport-to-be-functional-from-march-2022

தமிழகத்தில் பெருகிவரும் கொரோனா பரவலால் தமிழக அரசு இரவுநேர லாக்டவுனை அறிவித்தது. இதனையடுத்து திருச்சி விமான நிலையத்தில் இரவில் விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் பலப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததால் இரவு 11.30 மணி முதல் காலை 8 மணி வரை விமானங்களை இரவில் இயக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை விமானங்கள் இயங்க விமான நிலையத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரையில் இந்த அறிவிப்பு தொடரும் என விமான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!