Tamil Reader

தமிழ்நாட்டில் நாளை முதல் பள்ளிக்கல்லூரிகள் திறப்பு – அரசுப்பேருந்தில் மாணவர்களுக்கு இலவச பயணம்!

தமிழ்நாட்டில் நாளை முதல் (செப்டம்பர் 1 ) திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக, அங்கிருந்து கல்வி பயில வரும் மாணவ மாணவிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன் பரிசோதனை செய்ததற்கான சான்று பெற்று இருப்பதை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனி மனித இடைவேளி, கிருமி நாசினி உள்ளிட்டவற்றை வழங்கி மாணவர்களுக்கு பாதுகாப்புடன் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நாளை முதல் அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Free Bus Pass Scheme Tamil Nadu For Students - PM Jan Dhan Yojana

மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டுக்கான கட்டணம் இல்லாத பேருந்து பயண அட்டை போக்குவரத்துக் கழகங்கள் வழங்கும் வரை, இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரி மற்றும் தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகள், தங்களது கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையை காண்பித்து அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க.!