Tamil Reader

தமிழ்நாட்டில் கிடுகிடுவென உயரும் கொரோனா தொற்று பாதிப்பு; மேலும் 102 பேருக்கு தொற்று உறுதி..!

Covid 19 33

கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒன்று, இரண்டு என பதிவாகி வந்துகொண்டிருந்த சம்பவங்கள் தற்போது கொத்து கொத்தாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் COVID-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் நேற்று வரை 309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 102 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 484 பேருக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.


மற்ற சில பதிவுகள்