Tamil Reader

திருச்சியில் இருந்து அமீரகம் செல்லவிருந்த இருவருக்கு தொற்று உறுதி

Trichy International Airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமீரக ஷார்ஜாவுக்கு செல்லவிருந்த பயணிகள் இருவருக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்டதால் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட தொற்று சோதனை முடிவின் அடிப்படையில் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்கதிருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!

இதன் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு செல்லவிருந்த இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

அவர்கள் கோவில்பட்டி மற்றும் கடலூரைச் சோ்ந்தவர்கள் ஆவர். அதனை தொடர்ந்து, அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க.!