Tamil Reader

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கு 7 நாள் குவாரண்டைன் – அரசு அறிவிப்பு..!

Airport (2)

இந்தியாவில் கொரோனாவின் புதுவகை திரிபான ஒமிக்ரான் வேகமாகப் பரவிவரும் நிலையில் பல மாநிலங்கள் மீண்டும் ஊரடங்குகளை அறிவித்துவருகின்றன. அதேபோல, மகாராஷ்டிரா, கர்நாடாக ஆகிய மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது மாநிலங்களுக்கு வரும் பயணிகள் 7 நாட்கள் குவாரண்டைன் இருத்தல் வேண்டும் என அறிவித்துள்ளன.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளும் 7 நாட்கள் வீட்டிலேயே குவாரண்டைன் இருத்தல் வேண்டும் என தற்போது இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் பரவலை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.!