Tamil Reader

“திமுகவில் எல்லோரும் குண்டு குண்டாக இருக்கிறார்கள்; அவர்களுக்கு யாரும் ஒட்டு போடாதீங்க” : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..!

edapadi palaniswami

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அரசியல் தலைவர்கள் மைக்கும் கையுமாக தென்படுகிறார்கள். அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் என கட்சிகள் பல்வேறு வகைகளில் தங்களது பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ஸ்டாலினை விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பேசுகையில்,” நான் ஊர்ந்து சென்று முதலைமைச்சர் ஆனேன் என ஸ்டாலின் கூறிவருகிறார். எனக்கு கால்கள் இல்லையா? நான் பாம்பா? பல்லியா? எனக் கேட்டிருந்தது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இன்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர்,” திமுகவில் அனைவரும் குண்டு குண்டாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் புரோட்டா, பிரியாணி தின்றுவிட்டு பணம் கொடுப்பதில்லை.10 ஆண்டு கோர பசியில் திமுக இருக்கிறது. அவர்களைத் தேர்ந்தெடுத்தால் கடை கடையாக வசூல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்” எனக்கூறியிருக்கிறார்.

இதுகுறித்த உங்களது கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.

இதையும் படிங்க.!