Tamil Reader

ஊர்ந்துபோய் முதலமைச்சர் ஆனேனா? நான் பாம்பா, பல்லியா? : பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!

ADMK Edappadi Palanisamy a

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் வாக்குறுதிகள், வேட்புமனுத் தாக்கல் என தமிழகம் ஜகஜோதியாக தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகிவருகிறது.

கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியை ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவியைப் பெற்றவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புவனகிரியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்னை ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனவர் எனக் கூறுகிறார். நான் என்ன பாம்பா? பல்லியா? என முதலமைச்சர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய இந்த வீடியோ தான் தற்போது தமிழகத்தின் வைரல் கண்டென்ட்.

இதையும் படிங்க.!