தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 75 பேருக்கு COVID-19 வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
அதில், 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், மேலும் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதம் மூலம் தமிழகத்தில் 309 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை, 86 ஆயிரத்து 342 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மூலம் தற்போது தமிழகம் இந்தியாவின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.