Tamil Reader

COVID-19: தமிழகத்தில் புதிதாக 110 பேர் பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 234ஆக உயர்வு..!

Madurai Ward

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஒரே நாளில், புதிதாக 110 பேருக்கு COVID-19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இவர்கள் அனைவருமே டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழக அரசு வேண்டுகோளை ஏற்று டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாகவே முன்வந்து தகவல் தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக:
  • நெல்லை – 6
  • கோவை – 28
  • ஈரோடு – 2
  • தேனி – 20
  • திண்டுக்கல் – 17
  • மதுரை – 9
  • திருப்பத்தூர் – 7
  • செங்கல்பட்டு – 7
  • சிவகங்கை – 5
  • தூத்துக்குடி – 2
  • திருவாரூர் – 2
  • காஞ்சிபுரம் – 2
  • கரூர் – 1
  • சென்னை – 1
  • திருவண்ணாமலை – 1

ஆக மொத்தம் 15 மாவட்டங்களை சேர்ந்த 110 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!