தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1173ஆக உயர்ந்துள்ளது. அதாவது நேற்று முதல் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஆக உயரத் தொடங்கியது.
திருப்பூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 3 பேர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்.
ஆக மொத்தம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை வைத்து அளிக்கும் சிகிச்சைக்கு அனுமதி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வரை மாவட்ட வாரியாக பாதித்தோர் எண்ணிக்கை:
- சென்னை- 205
- கோவை- 126
- திருப்பூர்- 79
- ஈரோடு- 64
- திண்டுக்கல்- 56
- நெல்லை- 56
- நாமக்கல்- 45
- செங்கல்பட்டு- 46
- திருச்சி- 43
- தேனி- 40
- கரூர்- 41
- ராணிப்பேட்டை- 38
- மதுரை- 39
- திருவள்ளூர்- 33
- நாகை- 29
- தூத்துக்குடி- 26
- விழுப்புரம்- 23
- கடலூர்- 19
- சேலம்- 18
- திருப்பத்தூர்- 17
- விருதுநகர்- 17
- திருவாரூர்- 16
- வேலூர்- 16
- கன்னியாகுமரி- 15
- திருவண்ணாமலை – 12
- தஞ்சை- 12
- சிவகங்கை- 10
- நீலகிரி- 9
- காஞ்சிபுரம்- 8
- தென்காசி- 5
- ராமநாதபுரம்- 5
- கள்ளக்குறிச்சி- 3
- அரியலூர்- 1
- பெரம்பலூர்- 1
ஆக மொத்தம் – 1173