Tamil Reader

தமிழ்நாடு பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்!

மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் முதல்முறையாக திமுக அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22 பட்ஜெட் தாக்கல் செய்தது. தமிழ்நாடு வரலாற்றில் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய அவர், கொரோனா பாதிப்பு காரணமாக 2021ம் ஆண்டு இடைக்கால வரவு, செலவு திட்ட மதிப்பீடுகளில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடி ரூபாயாக இருந்த மொத்த வரி வருமான மதிப்பீடுகளை, 2021-22ம் நிதியாண்டின் திட்ட மதிப்பீடுகளில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக குறைக்கும் கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.மேலும், கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாடு பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீண்டு வராத காரணத்தால், 2021-22ம் ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், முந்தைய அரசு அறிவித்த 41 ஆயிரத்து 417 கோடி ரூபாய் அளவிலான செலவு திட்ட மதிப்பீடு, 2021-22ம் நிதியாண்டின் முடிவில் 58 ஆயிரத்து 692 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனவும் அறிவித்தார்.

TN Budget: TANGEDCO to be studied, restructured to combat mounting losses | The News Minute

தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதுபோல பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
  • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்
  • கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்
  • அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தூத்துக்குடி விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பூர் என 4 இடங்களில் டைடல் பார்க் அமைக்கப்படும்.
  • தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம்,நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • இனி 1950ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றிதழ்களை இணையதளத்திலேயே பார்வையிடலாம்.
  • தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 1 GPPS வேக திறன்கொண்ட இணைய வசதி ஏற்படுத்தப்படும்
  • 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு; தினசரி ஊதியம் 300 ரூபாயாக உயர்வு
  • 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1,303 ஆக அதிகரிக்கப்படும்
  • பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்
  • சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்
  • டிஜிட்டல் பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் ரூ.32,599.54 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள்
  • தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும்
  • மாணவர்கள் மனப்பாட முறையில் இருந்து விலகி சிந்திக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க நடவடிக்கை
  • 413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ரூ.13.22 கோடியில் வழங்கப்படும்
  • அடிப்படை கல்வியறிவை உறுதி செய்ய ரூ.66.70 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடக்கப்படும்
  • அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதிசெய்ய ரூ.114.18 கோடியில் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்படும்
  • 865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

இதையும் படிங்க.!