Tamil Reader

CAAவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனி தீர்மானத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்மொழிந்தார். அகதிகளாக வருவோரை மதரீதியாக பிரித்து பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் இருப்பதாக பேசிய அவர், இதன் மூலம் இஸ்லாமியர்கள் வஞ்சிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசு 2019ம் ஆண்டில் கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கும், மத நல்லிணக்கத்துக்கு உகந்ததாக இல்லை என்றும் நாட்டின் ஒற்றுமையை போற்றும் வகையில் இந்திய குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து பேரவையில் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அதிமுக அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள திமுக அரசு முடக்குவது குறித்து பேரவையில் பேச வாய்ப்பு மறுப்பட்டதால் வெளிநடப்பு செய்வதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் இருந்து வெளியேறினார்.

Tamil Nadu: Walk-out not to protest anti-CAA stance, says AIADMK | Chennai News - Times of India

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசாதது கவனிக்கத்தக்கது. இதேபோல பாஜகவும் வெளிநடப்பு செய்வதாக அக்கட்சி சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tamil Nadu Assembly adopts special resolution against farm laws - The Hindu

சபாநாயகர் பேச அழைத்தபோது வாய் உளறி குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்ததால் சபையில் சிரிப்பலை எழுந்தது. சபாநாயகர் அப்பாவு தனது பங்கிற்கு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை கலாய்த்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திமுக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், வி.சி.க, ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன

இதையும் படிங்க.!