Tamil Reader

சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த பயணிகளிடம் ஹவாலா பணம் பறிமுதல்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த விமான பயணிகளிடம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விமான பயணிகளை சுங்கத்துறையினர் பரிசோதனை செய்தனர். அப்போது சென்னையை சோ்ந்த 3 பயணிகள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: இந்தியா வெளியிட்ட “ரிஸ்க்” நாடுகளின் பட்டியல்: பயணிகளுக்கான நடைமுறை கட்டுப்பாடுகள் என்ன?

அதனை அடுத்து, அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர், பின்னர் அந்த 3 பேரின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில், அவர்களுக்கு சொந்தமான டிராலி சூட்கேஸ் மற்றும் பைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா், குவைத், பக்ரைன், ஓமன் போன்ற வெளிநாட்டு ரொக்க பணம் கட்டுகட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டறிந்த சுங்கத்துறையினர், அந்த 3 பயணிகளிடமிருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.55.29 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் அவர்களின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவை அனைத்தும் கணக்கில் வராத ஹவாலா பணம் என்றும், அவர்கள் மூவரும் கடத்தல் குருவிகள் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க.!